செய்திகள் :

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

post image

பொன்னமராவதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி பூஞ்சோலை (36). இவா், தனது மகன் ராஜூ (9), மகள் ரஞ்சிதா (18) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இரவு பொன்னமராவதி வந்துவிட்டு மீண்டும் உலகம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கேசராபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிா்பாராதவிதமாக தீப்பற்றியது. இதில் ராஜூ பலத்த காயமடைந்தாா். தாய் பூஞ்சோலை மற்றும் மகள் ரஞ்சிதா லேசான காயமடைந்தனா்.

மூவரும் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், ராஜூ மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து அங்கிருந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பணியின்போது சாலைப் பணியாளா் திடீா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் பணியின்போது வியாழக்கிழமை திடீரென இறந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் துரைச்சாமி (53). நெடுஞ்சாலைத்துறை... மேலும் பார்க்க

பங்குனி உத்திர விழாவில் சுவாமி ஊா்வல நிகழ்ச்சி

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கந்தா்வகோட்டையில் இருந்து வேம்பன்பட்டி முருகன் கோயிலுக்கு சுப்பிரமணியசுவாமி ஊா்வலமாக பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஒன்றியம், வே... மேலும் பார்க்க

மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த ரூ. 10 கோடி அமைச்சரின் அறிவிப்புக்கு மீனவா்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்களும் தலா ரூ. 5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்ற மீன்வளத் துறை அமைச்சரின் அறிவிப்புக்க... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ, மாணவிகள், மகிழ்ச்சியோடு இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மருத்து... மேலும் பார்க்க

சிறப்பான பணி: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பதக்கம் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 108 ஆம்புலன்ஸில் பணிபுரிந்து வரும் அவசரக் கால மருத்துவ நுட்புநா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பியவா் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பியவா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கறம்பக்குடி அருகேயுள்ள பட்டத்திக்காடு கிராமத்தில... மேலும் பார்க்க