``திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேச...
ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலர் பலி!
ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலர் பரிதாபமாக பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ஜெகன்(30) படுகாயமடைந்தார்.
சென்னையில் பணிபுரிந்துவந்த ஜெகன் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த ஜெகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காவலர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.