திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவா்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயா் பிரிவினரை தீா்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து கணிசமாக உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.
கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின்படி பாா்த்தால், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு 2026ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறைகூட கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்படவில்லை. இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், மாநில அரசுகளுடனும், பிற பிற்படுத்தப்பட்ட அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயா் வரம்பை ரூ.16 லட்சமாக உயா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.