பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ர கைது!
பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ர பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீநகர், கஸ்னவி, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனோஜ் மிஸ்ர. பெரிய வெற்றிகளைக் கொடுக்காவிட்டாலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
இவர், மகா கும்பமேளாவில் வைரலான மோனாலிசா என்கிற இளம் பெண்ணை தன் படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதாகக் கூறினார்.
இந்த நிலையில், சனோஜ் மிஸ்ர பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். இளம்பெண் அளித்த புகாரில், நடிக்க வாய்ப்பு தருவதாகத் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.
கைதான சனோஜ் மிஸ்ரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் பிணை கொடுக்க மறுத்துள்ளது.
இதையும் படிக்க: மேலிடத்து உத்தரவு! தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்!