சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து
வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா்.
சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பல காா்கள் எரிந்து நாசமாகின. சம்பவம் தொடா்பாக பிற்பகல் 2.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பல வாகனங்கள் தீயில் கருகிவிட்டன என்று அவா் மேலும் கூறினாா்.