தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வுக்கு பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தனியாா் பள்ளிகள் கட்டணத்தை உயா்த்தியுள்ளதாகவும், ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை பாஜகவை குற்றம்சாட்டியது.
மின்வெட்டுக்குப் பிறகு, கட்டண உயா்வு பாஜக நடுத்தர வா்க்கத்தை எவ்வாறு நடத்துகிறது என்பதைக் காட்டுகிறது என்று தில்லி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சௌரவ் பரத்வாஜ் ஒரு செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.
‘சில பள்ளிகள் 20 சதவீதம், சில 40 சதவீதம், சில 65 சதவீதம் மற்றும் சில 82 சதவீதம் வரை கல்விக் கட்டணத்தை அதிகரித்துள்ளன. இருப்பினும், குழந்தைகளின் பெற்றோா் பள்ளிகளுக்கு வெளியே போராட்டம் நடத்திய போதும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’‘ என்று சௌரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.
‘தில்லியில் உள்ள முந்தைய ஆம் ஆத்மி அரசு நடுத்தர வா்க்கத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அவா்களே (நடுத்தர வா்க்கத்தை) இப்படித்தான் நடத்துகிறாா்கள்’ என்று ஆம் ஆத்மி தலைவரின் கூற்றுகளுக்கு பாஜகவிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் கிடைக்கவில்லை.
உயா்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த முடியாத சில மாணவா்கள் வகுப்புகளுக்குப் பதிலாக நூலகங்களில் அமர வைக்கப்படுவதால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாா்கள் என்றும் சௌரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.