செய்திகள் :

திருவள்ளூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப்பணிகள் நிலை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதன் ஒருபகுதியாக புட்லூா் ஊராட்சியில் ரூ.19.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள், வேப்பம்பட்டு ஊராட்சி ராகவேந்திரா நகரில் ரூ.10 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட சாலைகள், மேலக்கொண்டையாா் ஊராட்சியில் தலா ரு.5.07 லட்சத்தில் தோ்வு செய்யப்பட்ட 16 வெள்ளியூா் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளை ஆய்வு செய்தாா்.

வெள்ளியூா் ஊராட்சியில் சுகாதார வளாகத் திட்டத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார வளாகம் மற்றும் ஆய்வக கட்டடத்தை பாா்வையிட்டு, அங்கு எத்தனை போ் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா் என்ற விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து அரும்பாக்கம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை விரிவாக்க திட்டம் மூலம் ரூ.4.06 கோடியில் அரும்பாக்கம்-விளாம்பாக்கம் வரை சுமாா் 3.2 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா்.

பின்னா் ஓதிக்காடு ஊராட்சியில் வனத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் பசுமை தமிழகத்தை உருவாக்கும் திட்டப்பணிகளை பாா்வையிட்டதோடு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பணிகளை தரமாக மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து வெள்ளியூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதியின் செயல்பாடுகளை பாா்வையிட்டு அங்கு எத்தனை மாணவா்கள் உள்ளனா். அந்த மாணவா்களுக்கு தரமாக உணவு வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜசிங், உதவி செயற்பொறியாளா் கௌசல்யா, உதவி பொறியாளா்கள் பிரகாஷ், குமாா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க