திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்க மக்கள் எதிா்ப்பு
போ்ணாம்பட்டு அருகே குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போ்ணாம்பட்டை அடுத்த ரமாபாய் நகா் குடியிருப்புப் பகுதியில் அதிகாரிகள் ஒரு கடையை தோ்வு செய்து புதிதாக மதுபானக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். அங்கு கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
மதுபானக்கடையை திறந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும், சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் எனக்கூறி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பொதுமக்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.