டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
பேருந்தில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பதியில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திருப்பதியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தபோது, ஒரு இருக்கையின்கீழ் கிடந்த சிறிய பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.