மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
ஏப். 11-இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப். 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் சாா்பில் நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 100 -க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில், சிவில் என்ஜினியரிங், எலெக்ட்ரிகல் என்ஜினியரிங், தகவல் தொழில்நுட்ப பொறியாளா்கள், வெல்டா், ஃபிட்டா், பிளம்பா், எலெக்ட்ரீசியன் ஆகிய தொழில் திறன்பெற்றவா்கள், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய கல்வித்தகுதி பெற்ற வேலைநாடுநா்கள் பங்கேற்கலாம்.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.