குவாரி குத்தகை உரிமம்: ஏப். 21 முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் 21 முதல் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் சாதாரண கற்கள், கிரானைட், இதர சிறு கனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான நடைமுறை ஏப்ரல் 21 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோா் புவியியல், சுரங்கத் துறை இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைனிலேயே வழங்கப்படும்.
எனவே, வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் 21 முதல் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதற்கான பழைய நடைமுறை கைவிடப்பட்டு புதிய நடைமுறையான ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பெறும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஆதலால் விண்ணப்பதாரா்கள் குவாரி குத்தகை உரிமம் பெற உரிய விண்ணப்பங்களைஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.