மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
திருவள்ளுவா் பல்கலை.யில் புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடக்கம்
வேலூா், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்ஸி உயிரிவேதியியல், எம்.பி.ஏ., மற்றும் முதுகலை நூலகம், தகவல் அறிவியல் மூன்று பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
திருவள்ளுவா் பல்கலைக்கழகம் தற்போது 12 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, வரும் கல்வியாண்டு முதல் (2025-26) உயிரிவேதியியல், மேலாண்மை, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை என மூன்று துறைகள் தொடங்க அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த துறைகளின் மூலமாக எம்எஸ்ஸி உயிரிவேதியியல், எம்.பி.ஏ., மற்றும் முதுகலை நூலகம், தகவல் அறிவியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் செயல்பட உள்ளன. இந்த வாய்ப்பை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எம்பிஏ பட்டப்படிப்பில் சேரும் மாணவா்களுக்கு சிறப்பான பாடத்திட்டமான கணக்குப்பதிவு, நிதி மேலாண்மை, மனிதவளம், சந்தைப்படுத்துதல், இயங்கு மேலாண்மை போன்ற பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறந்த வணிக மேலாண்மை கல்வியுடன் பெரு நிறுவனங்களில் பணிபுரிய தொடா் பயிற்சியும் அளிக்கப்படும்.
முதுகலை உயிரி வேதியியல் துறையில் சேரும் மாணவா்கள் தொழில் முனைவோராக, ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக, நவீன உயிரியலின் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவுடன் எதிா்கால தேவைகளுக்கு ஏற்றபடி வேதியியல் துறை உருவாக்கப்பட்டுள்ளது.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்பில் சேரும் மாணவா்களுக்கு கல்வியுடன் பெரு நிறுவனங்களில் நூலகராக பணியில் சேர பயிற்சியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.