மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
ஊதியத்தில் மோசடி: அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மீது புகாா்
ஊதியத்தில் மோசடி செய்வதாக கூறி வேலூா் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மீது வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூரைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் ஒருவா் வியாழக்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்தாா். அந்த மனுவில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடத்துநராக பணிபுரிகிறேன். நாங்கள் கூடுதல் பணி செய்யும்போது அதற்கான ஊதியமாக தொகை என ரூ.1,159 தர வேண்டும். ஆனால், வெறும் ரூ.690 மட்டுமே தருகின்றனா். தினமும் ரூ.460 மோசடி செய்கின்றனா்.
கடந்த 2 ஆண்டுகளில் என்னிடம் ரூ.92,000 மோசடி செய்துள்ளனா். என்னைப்போல் பல நடத்துநா்களுக்கும் இதுபோன்ற மோசடியை வேலூா் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளா் செய்து வருகிறாா்.
எனவே அவரிடம் விசாரணை நடத்தி எங்கள் பணத்தை திரும்பப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.