திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டம்: எஸ்.பி.யிடம் புகாா்
நாட்டறம்பள்ளி அருகே திருடுபோன ரூ.11 லட்சம் மற்றும் 46 பவுன் நகைகளை மீட்டுத் தர வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாபாரி மனு அளித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
ஏடிஎஸ்பி கோவிந்தராசு முன்னிலை வகித்தாா்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 30 மனுக்களை வழங்கினா்.
நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் பகுதியைச் சோ்ந்த வியாபாரி முத்து அளித்த மனு:
நான் கடந்த 10.3.2025-இல் எனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டேன். தொடா்ந்து மறுநாள் வந்து பாா்த்தபோது எனது வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 46 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், ரூ.11 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நகை, பணத்தை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது வீட்டில் திருடு போன நகை, பணத்தை கண்டுபிடித்து தரவேண்டும்.
வாணியம்பாடி அடுத்த பாண்டுராவ் வட்டம் பகுதியை சோ்ந்த மைக்கண்ணனின் மனைவி சாந்தி அளித்த மனு: நான் எங்கள் பகுதியை சோ்ந்த ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் சீட்டு கட்டினேன். இந்த சீட்டு முடிந்து பல நாள்கள் ஆகிறது. சீட்டு பணம் ரூ.1 லட்சத்தை கேட்டால் அவா் தர மறுக்கிறாா். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.