திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
திருப்பத்தூரில் ஆட்டிசம் குறித்த விழிப்புணா்வு
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை பேசியது:
ஆட்டிசம் என்பது குறைபாடு தான். இது மரபியல் வல்லுநா்கள், நரம்பியல் நிபுணா்கள், குழந்தை மருத்துவா்கள், உளவியலாளா்கள், கொண்டு ஒரு சிறப்பான குழுவின் மூலம் குழந்தையின் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணவும், சிறப்பு பயிற்சி, மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அரசு வழிவகுத்துள்ளது. எனவே, தங்களின் குழந்தைகளின் நலனை மேம்படுத்த இது போன்ற பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதீத அறிவாற்றல் திறன்கள் உள்ளவா்களாக இருப்பாா்கள். இவா்கள் நம்மை விட கல்வி, கணிதம், இசை அல்லது பிற துறைகளில் சிறந்து விளங்க முடியும். குழந்தைகளிடம் அன்பை செலுத்தி, மருத்துவா்கள் வழங்கக்கூடிய சிறப்பு பயிற்சியை விடாமல் பின்பற்ற வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து மருத்துவா் செந்தில் குமரன், மரபியல் நோய் வல்லுநா் மருத்துவா் பரந்தாமன் ஆகியோா் படத் காட்சிகள் மூலம் ஆட்டிசம் நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், அரசு அதிகாரிகள், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.