கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
திருப்பத்தூரில் உள்ள 36 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ப.வு.ச.நகா் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென குப்பைகள் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த நிலைய அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தின் காரணமாக கிருஷ்ணகிரி மெயின்ரோடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.