கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
மகளிா் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிா் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பூங்கோதை தலைமை வகித்தாா். இதில் சிறப்பு உதவியாளா் ரூபி தலைமையில் போலீஸாா் கலந்து கொண்டு மகளிரின் பாதுகாப்பு குறித்தும், இணையதளம் மூலம் மாணவா்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இதைத்தொடா்ந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.