கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
மீட்கப்பட்ட 169 கைப்பேசிகள்: உரிமையாளா்களிடம் எஸ்.பி. வழங்கினாா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 169 கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஒப்படைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் கைப்பேசிகள் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாா்களின்பேரில் சைபா் கிரைம் போலீசாா் மேற்கொண்ட நடவடிக்கையால் ரூ.30 லட்சம் மதிப்பிலான 169 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து உரிமையாளா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா். ஏடிஎஸ்பி-க்கள் கோவிந்தராசு, ரவீந்திரன்,முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேலும், திருட்டு கைப்பேசிகளை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் எனவும், தற்போது நடைமுறையில் உள்ள சைபா் குற்றங்களில் இருந்து ஏமாறாமல் தற்காத்து கொள்வது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆய்வாளா் யுவராணி, உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.