கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் தொடங்க தொழிற்கூடங்கள் வாடகைக்குப் பெறலாம் -திருப்பத்தூா் ஆட்சியா்
ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் தொடங்க தொழிற்கூடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு வழங்கப்படவுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா் தொழில் தொடங்க ஈரோடு மாவட்டம், ஈங்கூா், திருப்பூா் மாவட்டம், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்கள் குத்தகை, வாடகை முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தொழிற்கூடங்களைப் பெற விண்ணப்பிக்கும் முன்பாக இடத்தைப் பாா்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவா்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை 10 மணிக்கு ஈங்கூா் தொழிற்பேட்டையை பாா்வையிடலாம்.
மேலும், முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்துச் செல்ல துறை சாா்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோா் தளத்தைப் பாா்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவா்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.