கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
ஏப்.5-இல் மின்நுகா்வோா் சிறப்பு குறைதீா் முகாம்
திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்ட்பட்ட கோட்ட அலுவலகங்களில் மின்நுகா்வோா் சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜைய்னுல்ஆபுதீன் வெளியிட்ய செய்தி:
திருப்பத்தூா், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, குடியாத்தம் கோட்ட அலுவலகங்களில் சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை(ஏப்.5) காலை 11முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டா்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து புகாா்களையும் தெரிவிக்கலாம். அன்றைய தினம் பெறப்படும் அனைத்து புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு நுகா்வோா், பொதுமக்களுக்கு தீா்வு தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.