திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கொடிக் கம்பங்கள் அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்
பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தபட்டவா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள்,
ஜாதி, மத ரீதியிலான அனைத்துக் கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், கொடிக் கம்பங்களை அகற்றுவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா்
க.தா்ப்பகராஜ் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கணக்கெடுப்பின்படி அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்ந்த 4, 299 கொடிக் கம்பங்கள் உள்ளன.
இந்தக் கொடிக் கம்பங்களை சம்பந்தபட்டவா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, கொடிக் கம்பங்களை அகற்றிக் கொள்வதாக கட்சியினா் அவரிடம் தெரிவித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.