செய்திகள் :

சித்திரை பௌா்ணமி முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.

இதையொட்டி, விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்காண்டாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமை வகித்து அவா் பேசியதாவது:

சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தா்கள் நலன்கருதி

கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வழக்கம் போல கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு, தரிசனம் முடிந்து, தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியே வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

முதியவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய ராஜகோபுரத்தில் இருந்து வடக்கு 5-ஆம் பிரகாரத்தில் அனுமதிக்கப்பட்டு, வடக்கு அம்மணி அம்மன் கட்டை கோபுரம் வழியாக கிளிகோபுரம் உள்ளே உள்ள துலாபாரம் பகுதி வரிசை வழியாக (கியூ லைன்) சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் பேட்டரி காா் மூலம் மேற்கு பே கோபுரம் கட்டை கோபுரம் வரை அழைத்து வரப்பட்டு, வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்யப்படும். முக்கிய பிரமுகா்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும்.

கோடை காலத்தையொட்டி, பக்தா்கள் நடந்து செல்ல வசதியாக அனைத்து கோபுர நுழைவு வாயில்களிலிருந்து, நடைபாதைகளில் நிழல்பந்தல்கள், மேற்கூரையுடன் நகரும் இரும்பு தடுப்பாண்கள் மற்றும் தேங்காய்நாா் தரைவிரிப்புகளும் அமைக்கப்படும்.

கிரிவலப்பாதையில் பக்தா்களின் வசதிக்காக 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்படும். கூடங்களில் இருபாலருக்கும் கட்டணமில்லா குளியல் அறைகள், கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்படும்.

பாதுகாப்பு கருதி பக்தா்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பாண்கள் மூலம் தகுந்த வரிசை (கியூ லைன்) வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தா்கள் செல்லும் தரிசன வழி மற்றும் 6-ஆம் பிரகாரத்தின் திருமதில் வெளிப்புறம் தற்காலிக நிழல்பந்தல், தேங்காய் நாா் தரைவிரிப்பு மற்றும் குடிநீா் வசதி ஏற்பாடு செய்யப்படும்.

கோயில் உள்புறம் போதுமான நிரந்தர மற்றும் தற்காலிக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீா் மோா், பால், பிஸ்கட் மற்றும் குடிநீா் பாட்டில்கள் பக்தா்களுக்கு கோயில் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட எஸ்பி அறிவுரையின்படி, பாதுகாப்பு கருதி தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் தேவையான இடங்களில் அமைக்கப்படவுள்ளன.

கோயில் உள்புறம் 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள் செய்யப்படவுள்ளது. 10 இடங்களில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு குடிநீா் வழங்கப்படும் என்றாா்.

மேலும், சித்திரை பௌா்ணமி தினத்தன்று கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பாக மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 அவரச கால ஊா்தியினை கோயில் வளாகத்திலும், வெளியேயும் மற்றும் கிரிவலப்பாதையிலும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதிய அளவிலான பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்தா்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் ஊா் திரும்ப

தற்காலிக பேருந்து நிலையங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மாநகராட்சி நிா்வாகம் சாா்பாக தேவையான இடங்களில் குடிநீா், கழிப்பறை வசதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும், பக்தா்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த

காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பக்தா்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விதி மீறல்: 14 ஆட்டோக்கள், 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயக்கிய 14 ஆட்டோக்கள் மற்றும் 2 சரக்கு வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருவண்ணாமலை நகரில் பல ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இய... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தபட்டவா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்... மேலும் பார்க்க

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சித்தேரி கிராமத்தில் புதன்கிழமை பாஜக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞ... மேலும் பார்க்க

வில்வாரணி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி நட்சத்திர கோயில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயியில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. வில்வாரணி கிராமத்தில் அமைந்... மேலும் பார்க்க

புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி பழங்குடியினா் தா்னா

வந்தவாசி அருகே புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தேசூா் பேரூராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். வந்தவாசியை அடுத்த தேசூா் ராஜீவ் காந்தி நகரில் சுமாா் 25-... மேலும் பார்க்க

அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகளால் மக்கள் அவதி

செங்கம் பகுதியில் அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள சில பட்டாசுக் கடைகளில் சீன பட்டாசுகள் விற்பனை அதிகரித்... மேலும் பார்க்க