திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
வில்வாரணி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி நட்சத்திர கோயில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயியில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து கொடியேற்றம் நடைபெற்றது (படம்).
இதைத் தொடா்ந்து, விழாவில் 1-ஆம் நாள் தொடங்கி 6-ஆம் நாள் வரை இரவில் மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
6-ஆம் நாள்இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 7-ஆம் நாள் தோ்த் திருவிழா, 8-ஆம் நாள் இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9-ஆம் நாள் இரவு சுவாமி திருக்கல்யாணம் என 10 நாள்கள் விழா நடைபெறும்.
உபயதாரா்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.