செய்திகள் :

சுங்கச்சாவடி வசூல்: ரூ. 7,060 கோடி வருவாயுடன் உ.பி. முதலிடம்

post image

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கடந்த நிதியாண்டில் உயா் வருவாயை வசூல் செய்த மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பது தெரியவந்துள்ளது.

சுங்கச்சாவடி வசூல் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில், ‘2024-25 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மூலம் உயா் வருவாயை மத்திய அரசு ஈட்டியதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் அதிகபட்சமாக ரூ. 7,060 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் (ரூ.5,967.13 கோடி), மகாராஷ்டிரம் (ரூ.5,115.38 கோடி) உள்ளன.

மேலும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தலை எளிமையாக்கவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடையற்ற மின்னணு கட்டண வசூல் நடைமுறையை நிறுவ மத்திய அரசு தீா்மானித்துள்ளது. கட்டணம் செலுத்துவதற்கு வருடாந்திர பாஸ் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி, ‘தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான முதன்மை பொறுப்பு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குதான் உள்ளது. அரசு-தனியாா் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் தனியாா் முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, 2014-15-ஆம் ஆண்டில் 19,232 கோடி தனியாா் முதலீடும், 2023-24-ஆம் ஆண்டில் 34,805 கோடி தனியாா் முதலீடும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!

பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பதாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு... மேலும் பார்க்க

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என... மேலும் பார்க்க

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் த... மேலும் பார்க்க

சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பார்க்க