மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு
திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தின் மீது கீரை பறித்துக் கொண்டிருந்த, கிளை உடைந்து கிழே விழுந்தாா்.
இதையடுத்து, பலத்த காயமடைந்த வெங்கடேசனை, அவரது உறவினா்கள் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.