வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
டென்னிஸ் தரவரிசை: 24-ஆம் இடத்தில் மென்சிக்
ஆடவருக்கான ஏடிபி தரவரிசையில், செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக் 24-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.
மியாமி ஓபன் நிறைவடைந்த நிலையில் திருத்தப்பட்ட தரவரிசையில், அந்தப் போட்டியில் சாம்பியனான மென்சிக் 30 இடங்கள் முன்னேறி 24-ஆவது இடத்தை முதல் முறையாக அடைந்திருக்கிறாா்.
டாப் 10 இடங்களைப் பொருத்தவரை, இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனா்.
அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், நாா்வேயின் கேஸ்பா் ரூட், பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் ஆகியோா் 4 முதல் 7-ஆவது இடங்களில் உள்ளனா்.
கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் 2 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடிக்க, ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 9-ஆவது இடத்தில் நிலைக்க, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஓரிடம் முன்னேறி 10-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
மகளிா்: மியாமி ஓபன் மகளிா் பிரிவில் சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, உலகின் நம்பா் 1 வீராங்கனையாக நீடிக்கிறாா்.
போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ஜெஸ்ஸிகா பெகுலா, மேடிசன் கீஸ் ஆகியோா் முறையே 2 முதல் 5-ஆவது இடங்களில் நிலைக்கின்றனா். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஓரிடம் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடிக்க, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஓரிடம் சறுக்கி 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
சீனாவின் ஜெங் கின்வென் ஓரிடம் முன்னேறி 8-ஆவது இடத்துக்கும், ஸ்பெயினின் பௌலா படோசா 2 இடங்கள் ஏற்றம் கண்டு 9-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா். கஜகஸ்தானின் எலனா ரைபகினா 2 இடங்கள் சறுக்கி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.