செய்திகள் :

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபர்

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவகாரத்தை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழியும் எழுப்பினர்.

டி.ஆர். பாலு: இலங்கை படையினரால் பிடிபடும் இந்திய மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது. கடந்த பிப்ரவரி 18-இல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எனக்கு எழுதிய கடிதத்தில் 2024, டிசம்பர் 15-17 தேதிகளில் இலங்கை அதிபர் திசாநாயக அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தபோது, தமிழக மீனவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவதையும், பலப்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவித்து, அவர்களுடைய படகுகளை திருப்பி அனுப்பவும், அடுத்த கட்ட மீனவர் பேச்சுவார்த்தையை கூட்டவும் இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் கடிதத்தில் தெரிவித்த விஷயங்கள் கள எதார்த்தத்துடன் முரண்படுகின்றன. இதே தகவலை சமீபத்தில் என்னுடன் கலந்துரையாடிய ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவரும் உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆறு மாதங்களாக 20 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். இது தவிர ராமேசுவரம், புதுக்கோட்டை மற்றும் பிற இடங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளபோது அந்நாட்டு அதிபருடன் இதுகுறித்து பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும்.

இலங்கை, இந்திய - தமிழக மீனவர்களுடனும், இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகளுடனும் நீடித்த அமைதி ஏற்பட ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்றார்.

கனிமொழி: தமிழக மீனவர்களின் 200-க்கும் அதிகமான படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அவற்றை அந்நாட்டு அரசு நாட்டுடைமையாக்கிக் கொண்டுள்ளது. படகுகளை பறிகொடுத்த இந்த மீனவர்களுக்கு மத்திய அரசும் மீன்வளத் துறையும் இழப்பீடு வழங்குமா? தமிழக அரசும் இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறையாக உள்ளது என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சருடன் அதிமுக வாக்குவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, சட்டத் துறை அமைச்சருடன் அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். சட்டப் பேரவையில் சட்டம், நீதித் துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி... மேலும் பார்க்க

உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: உயா்நீதிமன்றம் விளக்கம்

உதகை, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேவேளையில், சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் விளக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவிப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழகத்தில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா். தமிழக சட்டப் பேரவையில் சட்டம், சி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க

கொடைக்கானல் மாற்றுப் பாதைக்கு திட்ட அறிக்கை: அமைச்சா் எ.வ. வேலு உறுதி

கொடைக்கானலில் மாற்றுப் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் ... மேலும் பார்க்க