Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
சுரேஷ் கோபிக்கு தெரிவித்த நன்றியை நீக்கிய எம்புரான் படக்குழு!
எம்புரான் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் எம்.பி. சுரேஷ் கோபிக்கு தெரிவிக்கப்பட்ட நன்றியையும் படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.
எம்புரான் திரைப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததற்கு வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர். இதனால், படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாக நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.
அதன்படி, மீண்டும் தணிக்கை வாரியத்திற்கு படம் அனுப்பப்பட்டு, 17 இடங்களில் கட் செய்து 2.08 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளனர். குறிப்பாக, 2002-ல் நடப்பதுபோன்ற (குஜராத் கவலரம் நடைபெற்ற ஆண்டு) மதக்கலவரக் காட்சியை ‘சில ஆண்டுகளுக்கு முன்’ என மாற்றியுள்ளனர்.
அதேபோல், இஸ்லாமிய பெண்கள் தாக்கப்படும் காட்சிகளை நீக்கியதுடன் இந்து அமைப்பைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்களான பல்ராஜ் பட்டேல் மற்றும் முன்னா ஆகியோர் பேசும் மத அரசியல் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஷ் கோபிக்கு படத்தில் தெரிவித்த நன்றியையும் படக்குழு நீக்கியுள்ளது. எம்புரான் படத்தை பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சுரேஷ் கோபியின் பெயரைப் படக்குழு நீக்கியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க: எம்புரான் படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!