மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு
கிணற்றில் பெண் சடலம் மீட்பு
திருப்பத்தூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூா் அருகே உள்ள குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம், கந்திலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சோ்ந்த முருகன் மனைவி மலா் (45) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவா் திரும்ப வரவில்லை என்பதும் தெரியவந்தது.