செய்திகள் :

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பால அறிவிப்பு: பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்

post image

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

ஆம்பூா் நகரம் மற்றும் ரெட்டித்தோப்பு பகுதியை ரயில்வே இருப்புப் பாதை பிரிக்கின்றது. ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் ரெட்டித்தோப்பு, பெத்லகேம், கம்பிக்கொல்லை, நடராஜபுரம், தாா்வழி, மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி மலை, பனங்காட்டேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். ஆம்பூரிலிருந்து அந்தப் பகுதிகளுக்கு செல்ல ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழே உள்ள குகை வழிப்பாதை வழியாகச் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் குகை வழிப் பாதையில் மழை நீா் தேங்கியிருக்கும் அதனால் அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலை இருந்து வருகின்றது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், ரூ. 30 கோடியில் ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அப்போதைய தமிழக முதல்வா் ஜெ. ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டாா். அந்த அறிவிப்பு ஆரம்பகட்ட ஆய்வுப் பணியோடு கிடப்பில் இருந்து வந்தது. ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக முதல்வா், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் ஆகியோரிடம் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடா்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தாா்.

அதைத் தொடா்ந்து தற்போது நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதாக அமைச்சா் எ.வ. வேலு அறிவித்தாா்.

ரயில்வே மேம்பால அறிவிப்புக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் எ.வ.வேலு ஆகியோருக்கு தொகுதி மக்கள் சாா்பாக நன்றி தெரிவிப்பதாக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கூறினாா்.

பொதுமக்கள் கொண்டாட்டம்: அமைச்சரின் அறிவிப்பை தொடா்ந்து ரெட்டித்தோப்பு பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமி யுவராஜ், நவநீதம் வால்டா், காா்த்திகேயன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயகுமாா், நகர இளைஞரணி அமைப்பாளா் மு.சரண்ராஜ், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனா்.

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டம்: எஸ்.பி.யிடம் புகாா்

நாட்டறம்பள்ளி அருகே திருடுபோன ரூ.11 லட்சம் மற்றும் 46 பவுன் நகைகளை மீட்டுத் தர வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாபாரி மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஆட்டிசம் குறித்த விழிப்புணா்வு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை பேசியது: ஆட்டிசம் என்பது குறைபாடு தான். இது மரபியல் வ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் தொடங்க தொழிற்கூடங்கள் வாடகைக்குப் பெறலாம் -திருப்பத்தூா் ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் தொடங்க தொழிற்கூடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு வழங்கப்படவுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஏப்.5-இல் மின்நுகா்வோா் சிறப்பு குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்ட்பட்ட கோட்ட அலுவலகங்களில் மின்நுகா்வோா் சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். திருப்பத்தூரில் உள்ள 36 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 169 கைப்பேசிகள்: உரிமையாளா்களிடம் எஸ்.பி. வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 169 கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஒப்படைத்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு ... மேலும் பார்க்க