திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
Jos Buttler : 'அந்த கேட்ச்சை விட்டதற்காக வெட்கப்பட்டேன்' - ஜாஸ் பட்லர் ஓப்பன் டாக்!
'குஜராத் வெற்றி!'
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

குஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். போட்டிக்குப் பிறகு ஜாஸ் பட்லர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.
'பட்லர் வருத்தம்!'
ஜாஸ் பட்லர் பேசுகையில், 'என்னுடைய பேட்டிங்கை மகிழ்ந்து அனுபவித்து ஆடினேன். எங்களின் பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். நான் உட்பட எங்கள் அணியினர் சிறப்பாக பீல்டிங் செய்திருந்தால் இன்னும் 30 ரன்கள் குறைவான டார்கெட்டே வந்திருக்கும். நான் அந்த கேட்ச்சை விட்டதற்காக வெட்கப்பட்டேன்.

முழுமையாக கேட்ச்சை பிடிப்பதற்குள்ளேயே கிப்ஸை போல கொண்டாட நினைத்து கோட்டைவிட்டு விட்டேன். (சிராஜ் வீசிய முதல் ஓவரில் அவர் விட்ட எளிமையான கேட்ச்சை குறிப்பிடுகிறார்.) பவர்ப்ளேயின் தொடக்கத்தில் பந்து கொஞ்சம் மூவ் ஆனது.
எங்களின் ஓப்பனிங் பேட்டர்கள் சிறப்பாக நின்று ஆடி சமாளித்து விட்டார்கள். சிறப்பான பௌலர்கள், திறன் வாய்ந்த பேட்டர்கள், அதிரடியான ஹார்ட் ஹிட்டர்கள் என எங்கள் அணி வலுவாகவே இருக்கிறது.' என்றார்.