செய்திகள் :

RCB : 'நாங்க 200 அடிக்கணும்னே நினைக்கல!' - தோல்விக்குக் காரணம் சொல்லும் ரஜத் பட்டிதர்

post image

'குஜராத் வெற்றி!'

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

Rajat Patidar
Rajat Patidar

குஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். சிராஜூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பேசியிருந்தார்.

ரஜத் பட்டிதர் பேசியதாவது, 'நாங்கள் 200 ரன்களை எட்ட வேண்டும் என நினைக்கவில்லை. பவர்ப்ளே முடிந்தவுடன் 190 ரன்கள் எடுத்தால் போதும் என்றே நினைத்தோம். ஆரம்பத்தில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்ததுதான் பிரச்சனையாகிவிட்டது. நாங்கள் துடிப்பாக ஆடிய விதம் சரிதான். ஆனாலும் பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கக்கூடாது.

RCB
RCB

எங்களின் பௌலர்களை பாராட்டியே ஆக வேண்டும் இந்த டார்கெட்டை வைத்து 18 ஓவர்கள் வரை போட்டியை இழுத்து சவாலளித்திருந்தார்கள். ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், டிம் டேவிட் ஆகியோர் பேட்டிங் ஆடிய விதமும் அற்புதமாக இருந்தது. எங்கள் அணியின் பேட்டிங் செறிவு எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையையே கொடுக்கிறது.' என்றார்.

CSK : 'பிரச்னைகளை சமாளிக்க புதிய இளம் வீரரை அழைத்து வரும் சிஎஸ்கே? - யார் இந்த ஆயுஷ் மாத்ரே

'சென்னையின் அழைப்பு!'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை சேர்ந்த 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரே என்கிற வீரரை திடீரென சேப்பாக்கத்துக்கு ட்ரையல்ஸூக்காக அழைத்திருக்கிறது. யார் இந்த ஆயுஷ் மாத்ரே? அவரை சிஎஸ்கே தங்... மேலும் பார்க்க

Jos Buttler : 'அந்த கேட்ச்சை விட்டதற்காக வெட்கப்பட்டேன்' - ஜாஸ் பட்லர் ஓப்பன் டாக்!

'குஜராத் வெற்றி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.... மேலும் பார்க்க

LSG: 'எங்க க்ரவுண்ட்ல பஞ்சாபுக்கு சாதகமாக பிட்ச்சை கொடுத்துட்டாங்க' - ஜாகீர்கான் கடும் குற்றச்சாட்டு

'லக்னோவில் பஞ்சாப் வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் லக்னோவில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.Luc... மேலும் பார்க்க

IPL 2025: டாப் 3 இடத்தில் கோப்பையே வெல்லாத அணிகள்; ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சுவாரஸ்யம்!

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல்நடப்பு ஐ.பி.எல் தொடரில் எல்லா அணிகளும் இரண்டு போட்டிகளை ஆடி முடித்துவிட்டன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இப்போதைய நிலவரப்படி, இதுவரை கோப்பையையே வெல்லாத 3 அணிகள் டாப் 3 இடத்தில்... மேலும் பார்க்க

LSG vs PBKS: 'குறி வெச்சா இரை விழும்!' - லக்னோவை எப்படி வீழ்த்தினார் ஸ்ரேயாஷ் ஐயர்?

'பஞ்சாப் வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட லக... மேலும் பார்க்க