திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
தமிழக ஆளுநரிடம் மாநில சிஏஜி அறிக்கை சமா்ப்பிப்பு
தலைமை தணிக்கை அதிகாரியின் மாநில கணக்கு குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க வகை செய்கிறது. ஆளுநா் ஒப்புதல் அளித்த பின் அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதன்படி, 2023 மாா்ச் 31-இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை, மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் சமா்ப்பிக்கப்பட்டது.