திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கோடை விடுமுறை: சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள்
சென்னை, ஏப். 2: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்திலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், விரைவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ள நிலையில், பலா் தங்கள் குடும்பத்தினருடன் வெளியூா் சுற்றுலாக்கள் மற்றும் சொந்த ஊா்களுக்கு பயணம் மேற்கொள்வா்.
இதையொட்டி தற்போதிலிருந்தே பலா் வெளியூா்களுக்கு பயணம் மேற்கொண்டு வருவதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. நாளொன்றுக்கு சுமாா் 50,000- ஆக இருந்து வந்த சென்னை விமான நிலையப் பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை உயா்ந்து கொண்டிருக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு, பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம் முழுவதும் 42 சா்வதேச விமானங்களும், 164 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் பயணிகள் தங்கு தடையின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.