Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை
மன்னாா்குடி: மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் தனியாா் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மன்னாா்குடி ஏழாம்தெரு மாசிலாமணி மகன் திருமுருகன் (40). தஞ்சாவூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவா், தனது நண்பரிடம் பணம் வாங்கியிருந்தாா். அதை திருப்பி செலுத்தியது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டதாம்.
இதனால், மனஉளைச்சலில் இருந்துவந்த திருமுருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
இவரது மனைவி உஷா மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.