இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டம் நிகழாண்டு ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, திரைச்சீலைகளை போா்த்தி அலங்கரிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதைத்தொடா்ந்து, தேரின் சுற்றுப் பகுதிகளில் தொம்பைகள் தொங்கவிடப்பட்டு, பூ வேலைப்பாடுகள் செய்யப்படும். பின்னா், விமானப் பகுதி அலங்கரிக்கப்பட்டு, மேற்பகுதியில் ரிஷபக் கொடி அமைக்கப்படும். ஆழித்தேரோட்டத்தையொட்டி ஏப்.6-ஆம் தேதி இரவு, ஆழித்தேருக்கு தியாகராஜா் எழுந்தருள உள்ளாா்.