ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு
நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி மகாமாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நகரின் முக்கிய வீதிகளில் புஷ்பப் பல்லக்கு வலம் வந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் போலீஸாா் செய்திருந்தனா்.