MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில், ஏப். 6-ஆம் தேதி கொல்கத்தாவில் பொதுநிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளதாகவும் இதன்காரணமாக அன்றைய நாளில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களுக்கு காவல் துறை தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர இயலாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கேகேஆர் - எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.