Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: கொல்கத்தா அணியில் சுனில் நரைன்!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார். மும்பை அணியில் அஸ்வினி குமார் என்பவருக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியின் ஒரேயொரு மாற்றமாக மொயின் அலிக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.