செய்திகள் :

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

post image

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டதாகவும் தாலுகா போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் நிலப்பிரச்னையில் தொடர்புடையவர்களை அழைத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்தனர்.

உடல்களை தேடி தீயணைப்பு வீரர்கள்

சந்தேகமடைந்த போலீஸார் நேற்று காலை முதல் மாலை தீயணைப்புத் துறையினரை வைத்து கிணற்றில் இறங்கி உடல்கள் அல்லது எலும்புக் கூடுகள் கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தனர்.

ஆனால் அதற்கான எவ்வித தடயங்களும் அங்குக் கிடைக்கவில்லை. இதனால் அணைப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, நிலப்பிரச்னையில் தொடர்புடைய 3 பேர் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

எனவே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் க்ச் சந்தேகித்தோம். ஊர்க்காரர்கள் மூலமாகத்தான் கிணற்றில் உடல்கள் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

தேடுதல்

தீயணைப்பு வீரர்கள் 15 அடிக்குத் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றித் தேடினர். ஆனால் அதில் உடல்கள் கொலை செய்து வீசப்பட்டதற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

இருப்பினும் நிலப்பிரச்னை விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்... மேலும் பார்க்க

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க