செய்திகள் :

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

post image

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்ஸ் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோக்கி சென்றுள்ளது. பின்னால் டூவிலரில் அந்த சிறுவன் சென்றுள்ளான்.

ஆம்புலன்ஸ் தஞ்சை அருகே உள்ள பட்டுக்கோட்டை பைபாஸ் பாலம் பகுதியை கடந்து சென்றது, சிறுவனும் பிந்தொடர்ந்து சென்றுள்ளான். அப்போது எதிரே ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர் சிறுவனை நிறுத்தியுள்ளனர்.

Robbery

`பாக்கெட்டில் என்னடா வச்சிருக்க’னு கேட்டவர்கள் திடீரென கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். அப்போது அந்த சிறுவன், எங்கிட்ட பணம் எதுவும் இல்லை, அப்பாவுக்கு உடம்பு சரியில்லைண்ணா, ஆம்புலன்ஸில் போய் கொண்டு இருக்கார். நான் மெடிக்கலுக்கு போகணும் என்னை விடுங்கண்ணா ப்ளீஸ்னு கெஞ்சியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் சிறுவனிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு சென்று விட்டனர்.

இதனால் தவித்து நின்ற அந்த சிறுவன், இது குறித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், சிறுவனை மிரட்டி செல்போன் பறித்த தஞ்சை விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்த நந்தகுமார் (25), முருகன் (37), சுதாகர் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். செலவுக்கு எங்ககிட்ட பணம் இல்லை. அதனால் சிறுவன் சொன்ன எதையும் கேட்காமல் செல்போனை பறித்து சென்றோம் என போலீஸிடம் அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க