செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

post image

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள  காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர்,  கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். தினமும் காலையில் கயத்தாறிலிருந்து தனது பைக்கில் கடம்பூருக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் தனது பைக்கில் சங்கிலிபாண்டி கடம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட சங்கிலிபாண்டி, கைது செய்யப்பட்ட சண்முகராஜ்- மகாராஜன்

நொச்சிகுளம் விலக்கில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், சங்கிலிபாண்டியின்  பைக் மீது மோதியுள்ளது. இதில் சங்கிலிபாண்டி பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கயத்தாறு காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தினர்.  ஆனால்,  விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததும், காயங்கள் அரிவாள் வெட்டு போல இருந்ததைப்  பார்த்ததாலும்,  அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்தக் கார், காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.  அத்துடன் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ், மகாராஜன் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம், “கைது செய்யப்பட்ட சண்முகராஜின் மனைவி சங்கீதாவிற்கும் உயிரிழந்த சங்கிலிபாண்டிக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது.

கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார்

இதனைக் கண்டித்த சண்முகராஜிற்கும் அவரின் மனைவி சங்கீதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு சங்கிலிபாண்டிதான்  காரணம் என நினைத்த அவர், `என் மனைவியின் இழப்பு, குழந்தைகளின் தவிப்பு என மன உளைச்சல், கவலையில் இருந்த நான் அவர் மீது என் நண்பர் மகாராஜனுடன் கார் ஏற்றி கொல்ல முயன்றேன். ஆனால், அவர் தப்பித்ததால் அரிவாளால் வெட்டினேன்' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்” என்றனர்.  

``காதலனை திருமணம் செய்ய தடையாக இருந்தது, அதனால்..'' - 3 குழந்தைகளை கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்

பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்களை திடீரென சந்தித்துக்கொண்டால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். ஆனால் ஆந்திராவில் பள்ளியில் படித்த நண்பனை சந்தித்ததால் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொல... மேலும் பார்க்க

மருதமலை : நாளை கும்பாபிஷேகம்; நேற்று வெள்ளி வேல் திருட்டு - சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்

கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்... மேலும் பார்க்க

50 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு; தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள் கைது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும்... மேலும் பார்க்க

ரூ.2 கோடி மதிப்பிலான ஹைபிரிட் கஞ்சா; சிக்கிய துணை நடிகை - 3 மாதம் காத்திருந்து தட்டித்தூக்கிய போலீஸ்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா என்ற தஸ்லிமா சுல்தான்(41). இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் உலகநாதபுரத்தில் வசித்துவந்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பிறோஸ்(26). தஸ்லிமாவும், பிற... மேலும் பார்க்க

குடிபோதை: காசு கேட்டு தகராறு; அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தூக்கிட்டு மரணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகள் 3 ஆம் வகுப்பு படித்துவந்தார். நிஷாந்த் 8 ... மேலும் பார்க்க

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க