MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
தோல்வியிலும் நற்செய்தி: சிஎஸ்கேவுக்காக தோனி புதிய சாதனை!
சேப்பாக்கில் நேற்றிரவு நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், தோனி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது.
இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அதிரடியாக அடித்தார். இருப்பினும் தோனி முன்பாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.
சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி.
இதற்கு முன்பாக சுரேஷ் ரெய்னா 4,687 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, தோனி 4,699 ரன்கள் எடுத்துள்ளார். மொத்த ஐபிஎல் தொடரிலும் 5,273 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து சிஎஸ்கே அணி வீழ்ச்சியை சந்தித்து வருவது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.