MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா
ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் சுக்மாவில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், நக்கல்களுக்குமிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதலின் முடிவில் 16 நக்கல்களைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்தனர்.
இதுதொடர்பாக அமித் ஷா எக்ஸ் பதிவில்,
பிரதமரின் தலைமையில், மார்ச் 31, 2026-க்கு முன்பு நக்சல்வாதத்தை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது. "ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது; அமைதி, வளர்ச்சி மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.
சுக்மா மாவட்டத்தில் இன்று காலை நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையின் போது 16 நக்சல்கள் கொல்லப்பட்டனர், இரண்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு தீவிர நடவடிக்கையில் 20-க்கும் மேற்பட்ட நக்சல்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.