MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!
ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து விஜயநகரம் (9 மண்டலங்கள்), பார்வதிபுரம் மன்யம் (12), அல்லூரி சீதாராம ராஜு, காக்கிநாடா தலா (மூன்று), கிழக்கு கோதாவரி (2) உள்ளிட்ட 35 மண்டலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 19 மண்டலங்கள் உள்பட 223 மண்டலங்கள் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவற்றைத் தொடர்ந்து விஜயநகரம் மற்றும் அனகப்பள்ளி (தலா 16 மண்டலங்கள்) மற்றும் கிழக்கு கோதாவரி, எலுரு, குண்டூர் (தலா 17), பிரகாசம் மாவட்டத்தில் உள்ள டாடிசெர்லா கிராமத்திலும், ஒய்எஸ்ஆர் கடப்பாவில் உள்ள கமலாபுரத்திலும் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை 181 இடங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும், குறிப்பாகக் கர்ப்பிணிகள், முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகப்படியான தண்ணீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.