தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் மண்டலப் போக்குவரத்து (ஆர்ஆர்டிஎஸ்) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 2 முதல் மே 2 பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக டெண்டர் கோரும் நிறுவனங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : தேர்தல் விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு! குடியுரிமை இருந்தால் வாக்களிக்க அனுமதி!
சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக 167 கி.மீ., சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் வழியாக 140 கி.மீ., கோவை - திருப்பூர் - சேலம் வழியாக 185 கி.மீ. தொலைவுக்கு மித அதிவேக ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.