"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 66,880-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 20 உயர்ந்து ரூ. 8,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.67 ஆயிரத்தை நெருங்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ. 113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | மியான்மர் நிலநடுக்கம்: பலி 694 ஆக உயர்வு! 1,670 பேர் காயம்!