எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்தநிலையில், சுங்கச்சாவடி கட்டண உயா்வுக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்.1ஆம் தேதி முதல் கட்டணம் உயா்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவுமுதல் உயர்த்தப்படவுள்ளது.
மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ. 5 முதல் ரூ. 75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.