செய்திகள் :

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

post image

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். அந்தவகையில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

திருவாரூர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது. மிக பிரம்மாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க, நான்கு வீதிகளிலும் வீதியுலா வரும் தேரை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடுவர்.

தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார். எனவே குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்: அமைச்சா் துரைமுருகன்

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது இது... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை விரைவில் அமல்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.... மேலும் பார்க்க