தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
சத்யநாராயண பூஜை: சங்கல்பம் செய்து கொள்ள சகல வேண்டுதலும் நிறைவேறும்; சாய்பாபாவின் அற்புதம் காணுங்கள்
2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சத்யநாராயண பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையால் அமைதியான வாழ்வும், விரும்பிய ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலை அருகே பொற்றையடியில் அமைந்திருக்கிறது ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம். இங்கே ஆனந்தமயமான ஸ்ரீசாய்பாபா அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளிய ஆனந்த பாபா பக்தர்கள் குறைகள் போக்கி வரமருள்கிறார். இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நாளில் (10-4-2025) பிரமாண்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன, வாசகர்கள் இங்கு சங்கல்பம் செய்து கொண்டால் சகல வேண்டுதலும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வெற்றி விநாயகர் சந்நிதி, தத்தாத்ரேயர் சந்நிதி, குரு ஸ்தான், தியானம் மண்டபம் போன்றவை அமைந்த பிரமாண்ட ஆலயமிது. இங்கு மாதம்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் டி.கே.எஸ் ஐயா அவர்களால் நடத்தப்பட்டு பிறகு பக்தர்களும் தங்கள் கரங்களாலேயே ஆனந்த பாபாவுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு தரப்படும் உதி பிரசாதம் விசேஷமானது சகல துக்கங்களையும் நோய்களையும் தீர்க்கக் கூடியது என்கிறார்கள் பக்தர்கள். வெண்பளிங்காலான ஸ்ரீசாயிக்கு முன்னால் சூரிய காந்தக் கல்லாலான ஸ்ரீசாயி திருப்பாதம் அமைந்துள்ளது.

2009-ம் ஆண்டு இந்த பகுதியில் குருஜி சி.பி.சத்பதி மற்றும் டி.கே.எஸ் ஐயா அவர்களின் முயற்சியால் ஆலயப் பணிகள் தொடங்கி 4.4.2012 அன்று பங்குனி மாத பூர நட்சத்திர நாளில் இந்த ஆனந்த சாய்பாபா ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நன்னாளை ஒட்டி இங்கு 3006 லிட்டர் பாலாபிஷேகமும் மற்றும் வெவ்வேறு திரவியங்களால் மகா அபிஷேகங்களும் பல்வேறு ஆராதனைகள், புறப்பாடுகள் நடைபெற உள்ளன. சர்வ வஸ்ய யாகம் மற்றும் கோபுர கலச அபிஷேகம் சிறப்பு ஆரத்திகள் நடைபெற உள்ளன. கலைமாமணி வீரமணி ராஜு மற்றும் அபிஷேக் ராஜு அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.
சாயி பக்தர்கள் பாபாவுக்கான வழிபாட்டு முறைகளில் முக்கியமாக கடைப்பிடிப்பது ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை. சாயி மகான் வாழும் காலத்தில் அவருக்கு அவரால் செய்ய அனுமதிக்கப்பட்ட பூஜை ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை மட்டுமே. இந்த பூஜையை செய்வதன் மூலம் ஸ்ரீசாயியின் அருள் பரிபூரணமாக நம் குடும்பங்களில் விளங்கும். இதனால் நீங்காத நோய்கள், வறுமை, பயம், தோல்வி ஆகியவை விலகி வாழ்க்கை மகிழ்ச்சியும் செழிப்புமாக மாறும் என்பது ஸ்ரீசாயி அன்பர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட ஶ்ரீ சாயிசத்யநாராயண பூஜையை சக்திவிகடன் வாசகர்களின் நலன்வேண்டி நடத்த இருக்கிறது.
சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
கன்னியாகுமரி ஆனந்த பாபா ஆலயத்தில் 10-4-2025 அன்று இந்த சத்யநாராயண பூஜை நடைபெற உள்ளது. இதில் நீங்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

சத்யநாராயண பூஜை பலன்கள்...
சத்யநாராயண பூஜை செய்தால் துன்பங்கள் நீங்கும். இன்பமும் மகிழ்ச்சியும் வளரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பெண்கள், சுமங்கலிகளாக இருப்பார்கள். வியாபாரம்-தொழில் மேன்மேலும் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம். இங்கு தரப்படும் உதியால் அதிர்ஷ்டம் பெருகும். தோஷங்கள் நீங்கும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, உதி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07